தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா |
சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அறிமுகமானவர் அப்புக்குட்டி. அதன்பிறகு அதே சுசீந்திரன் இயக்கிய அழகர்சாமியின் குதிரை படத்தில் கதையின் நாயகனாக நடித்தார். தொடர்ந்து மன்னாரு என்ற படத்திலும் நடித்தார். அதன்பிறகு காமெடி மற்றும் கேரக்டர் ரோல்களில் நடிக்கத் தொடங்கிய அப்புக்குட்டி தற்போது சில படங்களில் காமெடியனாகவும், வெட்டிப் பசங்க, காகித கப்பல் போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த படங்களில் தனது வேடங்கள் பற்றி அப்புக்குட்டி கூறுகையில், எனக்கு பொருந்தக்கூடிய எல்லாதவிதமான கேரக்டர்களில் நடிப்பேன். ஆனால் அந்த கேரக்டர்களில் காமெடி அதிகமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால் அதை மனதில் கொண்டுதான் கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறேன். தற்போது வெட்டிப்பசங்க படத்தில் கிராமத்து கதையிலும், காகித கப்பலில் நகரத்து கதையிலும் நடிக்கிறேன். இந்த இரண்டு படங்களுமே காமெடியை பிரதானமாகக்கொண்டு உருவாகின்றன. வெட்டிப்பசங்க படம் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்து விட்டது. காகித கப்பல் படப்பிடிப்பு மே 23-ந்தேதி தொடங்குகிறது. இந்த இரண்டு படங்களுமே கண்டிப்பாக வெற்றி பெறக்கூடிய அம்சங்கள் நிறைந்த கதைகள்.
இப்படி கூறும் அப்புக்குட்டியிடம், நீங்கள் ஹீரோவாக நடித்த சுழியம் ஏழு படம் இன்னும் வெளியாகவில்லையே? என்று கேட்டபோது,
சுழியம் ஏழு படத்தில் நான் ஹீரோ அல்ல. ஒரு கேரக்டர்தான் பண்ணியிருக்கிறேன். நான் ஹீரோவாக நடித்திருந்தால் அந்த படம் எப்போதோ ரிலீசாகியிருக்கும். நான் தெரிந்த முகம் என்பதால் என்னை ஹீரோ என்று சொல்லிவருகிறார்கள். தற்போது அந்த படத்திற்கான வியாபாரம் பேசிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். விரைவில் திரைக்கு வந்து விடும் என்று நினைக்கிறேன்.மேலும், தொடர்ந்து சினிமாவில் ஹீரோவாக, காமெடியனாக நடிக்கவே விரும்பு கிறேன். குறிப்பாக, எந்த மாதிரியான வேடமாக இருந்தாலும் காமெடிக்குத்தான் முதலிடம் கொடுப்பேன் என்கிறார் அப்புக்குட்டி.