மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இன்றைய சூழலில் எவ்வளவு பெரிய நட்சத்திரங்கள் நடித்த படமாக இருந்தாலும் திட்டமிட்ட தேதியில் படத்தை வெளியிட சாத்தியமற்ற சூழல் நிலவி வருகிறது. விஜய் சேதுபதி நடித்த இறைவி, பாபிசிம்ஹா நடித்த கோ2, சிம்பு நடித்த இது நம்ம ஆளு உட்பட பல பெரிய நடிகர்களின் படங்களையே திட்டமிட்ட தேதியில் வெளியிட முடியவில்லை.
இந்நிலையில், 'ஒரு நாள் கூத்து' படத்தை தயாரித்துள்ள 'கெனன்யா ஃபிலிம்ஸ்' பட நிறுவனம் இப்படத்தை அடுத்த மாதம் (ஜூன்) 3-ஆம் தேதி ரீலிஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தை அறிமுக இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் என்பவர் இயக்கியுள்ளார். 'அட்டகத்தி' தினேஷ்தான் ஹீரோ. மியா ஜார்ஜ் ஹீரோயின். நிவேதா பெதுராஜ், கருணாகரன், ரித்விகா, பாலசரவணன், ரமேஷ் திலக், ராமதாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். 'பண்ணையாரும் பத்மினியும்', 'ஆரஞ்சு மிட்டாய்' ஆகிய படங்களுக்கு இசை அமைத்த ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார்.
திருமணம் பற்றிய கதை அம்சம் கொண்ட ஒரு நாள் கூத்து படம் சமீபத்தில் சென்சாருக்கு சென்றது. படத்தைப் பார்த்த, சென்சார் அதிகாரிகள் இயக்குநரை பாராட்டியதோடு ஒரு நாள் கூத்து படத்திற்கு 'யு' சான்றிதழும் வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து தான் இப்படத்தை ஜூன் 3-ஆம் தேதி திரைக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கினாராம் தயாரிப்பாளர்.