மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ராஜாராணி படத்தை அடுத்து விஜய்யை வைத்து அட்லி இயக்கியுள்ள படம் தெறி. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான அப்படம் விஜய் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று 3-வது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் முதல் வார வெற்றியை மீடியாக்களுடன் பகிர்ந்து கொண்ட அட்லி, அடுத்த படம் குறித்து எந்த தகவலையும் அப்போது தெரிவிக்கவில்லை. விரைவில் உங்களையெல்லாம் சந்திப்பேன். அப்போது எனது அடுத்த படம் குறித்து தெரிவிப்பேன் என்பதோடு நிறுத்திக்கொண்டார்.
இந்த நிலையில், தற்போது பரதன் இயக்கத்தில் பெயரிடப்படாத தனது 60வது படத்தில் சென்னையிலுள்ள பின்னி மில்லில் போடப்பட்டுள்ள செட்டில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் ஓப்பனிங் பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைக்க, விஜய் அதிரடி நடனமாடிக்கொண்டிருக்கிறார். இதையடுத்து இடைவிடாமல் படப்பிடிப்பு நடை பெறுகிறதாம்.
இதற்கிடையே விஜய்யின் 61வது படம் குறித்த தகவலும் தற்போது கசியத் தொடங்கியுள்ளது. அந்த படத்தையும் தெறி படத்தை இயக்கிய அட்லியே தெறி-2 என்று இயக்குவதாக கூறப்படுகிறது. அப்படத்தை சிவாஜி புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தெறி ஹிட்டானால் தெறி-2 வில் நடிப்பேன் என்று ஏற்கனவே அட்லியிடம் விஜய் கூறியிருந்ததால் இந்த கூட்டணி மீண்டும் உருவாகியிருக்கிறதாம்.