மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சாமி இயக்கிய மிருகம் படத்தில் நடித்தவர் ஆதி. அதன்பிறகு சில படங்களில் நடித்தார். ஆனால் படங்களின் தோல்வி காரணமாக சரியான படவாய்ப்புகள் இல்லாமல் இப்போது தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்துக்கொண்டிருக்கிறார். என்றாலும் மீண்டும் ஹீரோவாக நடிப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், அவரை மிருகம் படத்தில் ஹீரோவாக்கிய சாமி இப்போது மிருகம்-2 கதையை படமாக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். அந்த படத்திற்கான கதை விவாதம் தஞ்சையில் நடந்து கொண்டிருக்கிறது.
மேலும், மிருகம் படத்தில் சிங்கிள் ஹீரோயின் நடித்தபோதும் இந்த இரண்டாம் பாகத்தில் 3 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். அதற்காக மலையாளத்தில் சில படங்களில் நடித்த 2 கதாநாயகிகளை தமிழுக்கு இறக்குமதி செய்யும் டைரக்டர் சாமி, இன்னொரு நடிகையை ஆந்திராவில் இருந்த அழைத்து வருகிறார். அதோடு, மிருகம் படம் வில்லேஜ் பின்னணி கதையில் உருவான நிலையில், மிருகம்-2 நகரம் சார்ந்த கதையில் உருவாகிறது. அடுத்த மாதம் இப்படத்தை தொடங்குகிறாராம் சாமி.