விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
ரம்யா நம்பீசன், லட்சுமி மேனன் வரிசையில் பாடகியாகியிருக்கிறார் த்ரிஷா. 'ஃபை ஃபை...' என்ற சூப்பர் ஹிட் பாடலுடன் மலையாள நடிகையான ரம்யா நம்பீசன் அட்டகாசமாக பாடியிருந்தார், பாடலும் சூப்பர் ஹிட்டானது. அடுத்து லட்சுமி மேனன் 'குக்குறு..குக்குறு...' என்று பாடினார். பாடல் அருமையாக இருந்தாலும் படம் ஓடாததால் அந்தப் பாடல் கவனிக்கப்படாமலே போய்விட்டது. மேலே சொன்ன இரண்டு பாடல்களையும் தமிழில் பாடியவர்கள் மலையாள நடிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு நடிப்பதற்காக வந்தார்கள். இசையமைப்பாளர் இமான் அவர்களை பாடகியாக்கிவிட்டார்.
ஆனால், சென்னையில் பிறந்து வளர்ந்த த்ரிஷா தற்போது அவர் நடித்துள்ள 'நாயகி' படத்தில் 'பயம்' என்ற தலைப்பு கொண்ட ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். தமிழிலும், தெலுங்கிலும் அவர் பாடியுள்ள அந்தப் பாடலை நேற்று வெளியிட்டார்கள். ஆங்கிலத்தில் ஆரம்பமாகும் அந்தப் பாடலின் ஆங்கில வரிகளை தெள்ளத் தெளிவாக உச்சரித்து பாடியுள்ள த்ரிஷா, தமிழை இப்படிக் கொலை செய்து பாடியிருக்க வேண்டாம். எந்த ஒரு வார்த்தையும் தெளிவாக உச்சரிக்கப்படவில்லை என்பதுதான் கொடுமை.