'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
தனுஷ் நடித்த திருடா திருடி படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகை சாயா சிங். அந்த படத்தில் துறுதுறு பெண்ணாக நடித்திருந்த அவர், மன்மதராசா பாடலில் தனுசுடன் போட்டி போட்டு நடனமாடியிருந்தார். அதையடுத்து கவிதை, அருள், ஜெயசூர்யா, வல்லமை தாராயோ, அனந்தபுரத்து வீடு போன்ற படங்களில் நடித்தவர், விஜய்யின் திருப்பாச்சியில் கும்பிட போன தெய்வம், குறுக்கே வந்ததம்மா -என்ற பாடலில் மன்மதராசா பாடலுக்கு இணையாக அதிரடி ஆட்டம போட்டிருந்தார் சாயாசிங்.
மேலும், 2012ம் ஆண்டு அனந்தபுரத்து வீடு படத்தில் வில்லனாக நடித்த கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்ட சாயாசிங், இப்போது கேரக்டர் நடிகையாக உருவெடுத்திருக்கிறார். இது கதிர்வேலன் காதல், உயிரே உயிரே படங்களைத் தொடர்ந்து உள்குத்து, பட்டினப்பாக்கம் போன்ற படங்களில் கேரக்டர் நடிகையாக உருவெடுத்துள்ளார். அதோடு, கிளாமர் இல்லாமல் என் வயதுக்கு மீறிய மெச்சூரிட்டியான வேடங்கள் கொடுத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று சினிமா வட்டாரங்களில் கூறி வருகிறார் சாயாசிங்.