மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
'லட்சுமி மேனன் நடித்தால், கண்டிப்பாக, பாக்ஸ் ஆபீஸ் ஹிட் தான்' என, கோலிவுட்டில் பேச்சு இருந்தது. லட்சுமியும், இதை, தனக்கான பெருமையாகவே கருதி வந்தார். ஆனால், அவர் நடித்து, சமீபத்தில் வெளிவந்த, மிருதன் படத்தின் ரிசல்ட் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதனால், நம் பெருமைக்கு பங்கம் வந்து விடுமோ என்ற கவலையில் இருக்கிறார் லட்சுமி. அடுத்தாக, விஜய சேதுபதிக்கு ஜோடியாக, இன்னும் பெயர் சூட்டப்படாத ஒரு படத்திலும், ஜெமினி கணேசன் என்ற படத்திலும் நடிக்கிறார். தொடர்ச்சியாக சறுக்கல்களை சந்தித்தால், கோடம்பாக்கம், தன்னை கை கழுவி விடும் என்பதால், இந்த இரு படங்களிலும், பார்த்து பார்த்து, தன் நடிப்பை மெருகூட்டி வருகிறாராம் லட்சுமி மேனன்.