மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
'ஈட்டி' படத்தை தொடர்ந்து அதர்வா நடிப்பில் இந்த வாரம் வெளிவரவிருக்கும் படம் - கணிதன். இப்படத்தை டி.என்.சந்தோஷ் இயக்கியிருக்கிறார். இவர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக இருந்தவர். கணிதன் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரெசா நடித்துள்ளார். வில்லனாக தருண் அரோரா நடித்துள்ளார். இவர்களுடன் கே.பாக்யராஜ், கருணாகரன், 'ஆடுகளம்' நரேன், சுந்தர் ராமு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். 'டிரம்ஸ்' சிவமணி இசை அமைத்துள்ளார். செல்வராகவனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அதர்வா நடிப்பில் சமீபத்தில் கடந்த டிசம்பரில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் 'ஈட்டி'. அந்தப் படத்தில் ஓட்டப் பந்தய வீரராக சிறப்பாக நடித்திருந்தார் அதர்வா! 'ஈட்டி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளிவரும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல, தியேட்டர்காரர்கள் மத்தியிலும் கணிதன் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 'கணிதன்' படத்தின் டிரைலரும், பாடல்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. எனவே கணிதன் படத்தைத் திரையிட தியேட்டர்காரர்கள் மத்தியில் கடும்போட்டி உருவானது.
இந்நிலையில் லிங்கா விவகாரம் தொடர்பாக தாணு மீது கடுப்பில் இருந்த செங்கல்பட்டு ஏரியா தியேட்டர் உரிமையாளர்கள் சிலர் கணிதன் படத்துக்கு ரெட் கார்டு போட்டதாக தகவல் வெளியானது. 'கலைப்புலி' எஸ்.தாணு தரப்பில் இது பற்றி கேட்டபோது, அப்படியொரு பிரச்சனை ஏதும் ஏற்படவில்லை. திட்டமிட்டபடி 450 தியேட்டர்களுக்கு மேல் கணிதன் படம் வெளியாகும் என்கின்றனர்.