மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஒரு காலத்தில் தொடர்ந்து படங்களைத் தயாரித்து வந்த சூப்பர்குட் பிலிம்ஸ் பட நிறுவனம் கடந்த சில வருடங்களாக படத்தயாரிப்பை நிறுத்திவிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயி நடித்த ஜில்லா படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரித்தது. அந்தப் படத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் பட தயாரிப்பை நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், ஆர்யாவை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க உள்ளது. 'மஞ்சப்பை' படத்தின் இயக்குனரான ராகவன் இந்தப் படத்தை இயக்குகிறார். அடர்ந்த காட்டுக்குள் நடக்கும் மர்மமான சம்பவங்களைப் பின்னணியாக வைத்து உருவாகும் அட்வெஞ்சர் த்ரில்லராம் இப்படம். இப்படத்திற்காக ஆர்யா வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கவிருக்கிறாராம்.
ஆர்யா உடன் நடிக்க உள்ள மற்ற நடிக, நடிகையரின் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. பெங்களூர் நாட்கள்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆர்யாவைத் தேடி பல புதிய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் தனக்கு பிடித்தமான கதைக்கு முன்னுரிமை கொடுத்து நடிக்க திட்டமிட்டுள்ளாராம் ஆர்யா. அந்த அடிப்படையில் அவர் தேர்வு செய்த முதல் கதைதான்.. இந்தப் படமாம். இப்படத்தில் ஆர்யாவின் நெருங்கிய நண்பரும் சூப்பர்குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரருமான ஜீவா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்.