ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
'யட்சன்' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் 'யாக்கை'. 2011-ல் ஆண்மை தவறேல் என்ற படத்தை இயக்கிய குழந்தை வேலப்பன் இயக்கும் இரண்டாவது படம். டேகன் என்ற ஆங்கிலப்படத்தை அப்படியே பிரதி எடுத்தது போல் காப்பியடித்து ஆண்மை தவறேல் இயக்கியிருந்தார். ஆண்மை தவறேல் படம் ஓடவில்லை. தவிர சொந்த சரக்கு இல்லாதவர் என்ற தகவலும் திரையுலகில் பரவியதால் குழந்தை வேலப்பனுக்கு அடுத்தப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு யாக்கை என்ற படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இந்தப் படத்துக்கு முதலில் 'இதயம்' என்று பெயர் சூட்டப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் இதயம் முரளி என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்தார். எனவே இதயம் என்ற பெயரை 'யாக்கை' என்று மாற்றினார்கள். யாக்கை படத்தில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்வாதி ரெட்டி நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
இப்படத்தின் பாடல்களில் ஒன்றை வருகிற 13 ஆம் தேதி இரவு வெளியிட இருக்கிறார்கள். பிப்ரவரி-14 காதலர் தினம் என்பதால் அதற்கு ஒரு நாள் முன்னதாக 'யாக்கை' பாடலை வெளியிட்டு ரசிகர்களுக்கு காதலர் தின பரிசாக வழங்கவிருக்கிறார் யுவன் மற்றும் 'யாக்கை' படக்குழுவினர்.