விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
'புலி' பட தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.டி.செல்வகுமார் தயாரிப்பில், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கி வரும் படம் - 'போக்கிரி ராஜா'. ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா முதலானோர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் போக்கிரிராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இப்படத்தின் பாடல்களை காதலர் தினமான ஃபிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இந்த விழாவை கோவையில் பிரம்மாண்டமான முறையில் நடத்த உள்ளனர்.
இவ்விழாவில் போக்கிரிராஜா படத்தில் நடித்த ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா மட்டுமின்றி நடிகை காஜல் அகர்வால் இப்படத்திற்கு இசை அமைத்துள்ள டி.இமான் உட்பட பல சினிமா பிரபலங்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
சென்னையை விட்டுவிட்டு கோவையை தேர்வு செய்தது ஏன்? சிபிராஜுக்கு கோவையில் ரசிகர்கள் அதிகம் இருப்பதாலும், போக்கிரிராஜா படத்தை வாங்கிய காஸ்மோ வில்லேஜ் சிவாவும் கோவையை சேர்ந்தவர். இதனாலேயே போக்கிரிராஜா படத்தின் இசையை கோவையில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இம்மாதம் 26-ஆம் தேதி போக்கிரிராஜா படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.