மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஒரு காலத்தில் விஜய், அஜீத்துடன் நடித்த சங்கவிக்கு நேற்று பெங்களூரில் உள்ள நட்சத்திர ஒட்டல் ஒன்றில் திருமணம் நடந்தது. பெங்களூரைச் சேர்ந்த கம்ப்யூட்டர் நிறுவன அதிபர் வெங்கடேசை திருமணம் செய்து கொண்டார் சங்கவி. இதில் சங்கவி மற்றும் வெங்கடேசின் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்.
மீனா உள்ளிட்ட சங்கவிக்கு மிகவும் நெருக்கமான சினிமா தோழிகள் கலந்து கொண்டனர். சங்கவியின் அம்மா ரஞ்சனா, வெங்கடேசின் அம்மா ஜானகி ஆகியோர் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தவர்களை வரவேற்றனர். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன், என்று சங்கவி ஏற்கெனவே அறிவித்து இருக்கிறார். சங்கவி தற்போது தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.