மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழில் 2016ம் ஆண்டு பல படங்களைத் தயாரித்தும், வெளியிடப் போவதாகவும் ஈராஸ் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. அந்தப் பட்டியலில் நலன் குமாரசாமி இயக்க உள்ள 'கை நீளம்' படமும் இடம் பெற்றிருந்தது. ஆனால், தான் அந்தப் படத்தை இயக்கப் போவதாக வந்த அறிவிப்பு தவறானது என்று நலன் குமாரசாமி மறுத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு 'காதலும் கடந்து போகும்' படத்திற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது அவரிடம் அது பற்றி கேட்கப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு அறிவிப்பு வெளியானது எனக்குத் தெரியவே தெரியாது என்றும் அவர் சொன்னார்.
'கை நீளம்' படத்தை 'சூது கவ்வும்' படம் முடிந்த பிறகு இயக்க முடிவெடுத்திருந்ததாகவும், அந்தப் படம் கொஞ்சம் 'சூது கவ்வும்' ஸ்டைலிலேயே இருக்கும் என்பதால் அந்தப் படத்தை இரண்டாவது படமாக எடுப்பதை கைவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் அந்தப் படத்தைத் தயாரிக்கப் போவதாக வெளிவந்த செய்தி தனக்கு ஆச்சரியமளிப்பதாக உள்ளது என்றும் அவர் சொன்னார். தற்போதைக்கு அடுத்த படத்தைப் பற்றி எந்த எண்ணமும் இல்லை என்றும் 'காதலும் கடந்து போகும்' பட வெளியீட்டிற்குப் பிறகே அது பற்றி யோசிக்க உள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.