விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
தமிழ்த் திரையுலகத்தில் தற்போது புதிது புதிதாக சில கூட்டணிகள் உருவாகி வருகின்றன. தொடர்ச்சியாக பல படங்களில் இணைந்து வெற்றி பெற்ற பல இயக்குனர் - நடிகர், இயக்குனர் - இசையமைப்பாளர், நாயகன் - நாயகி என பார்த்த நமக்கு சில புதிய கூட்டணிகள் உருவாவது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாக உள்ளன. அப்படி ஒரு புதிய கூட்டணி உருவாக தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
பிரபல இயக்குனரான கௌதம் மேனன் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்கப் போகும் ஒரு படத்தைப் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ச்சியாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். முதலில் இந்தக் கூட்டணியில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா இணைவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், இப்போது சந்தோஷ் நாராயணன் இசையமைக்கப் போவதாகச் சொல்கிறார்கள். 'கபாலி' படத்திற்குப் பிறகு பலரும் சந்தோஷ் நாராயணனை தங்களது படங்களுக்கு ஒப்பந்தம் செய்து வருகிறார்கள்.
இந்தப் படத்தில் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தின் நாயகிகளில் ஒருவரும், தற்போது தெலுங்கில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கும் ரெஜினா நடிக்க உள்ளாராம். விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.