மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சிம்பு, அனிருத் சேர்ந்த உருவாக்கிய ஒரே ஒரு பாடலால் தமிழகமே கொதித்துப் போய்க் கிடக்கிறது. இதைவிடப் பெண்களை மோசமாக அவமானப்படுத்த முடியாது என்று பெண்கள் அமைப்புகளும், மாணவர், மாணவிகளும் கொதித்துப் போயுள்ளனர். சில நாட்களுக்கு முன் அந்தப் பாடலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார் அனிருத். ஆனால், அடுத்த ஐந்து நிமிடத்திலேயே அந்தப் பாடலுக்கு இசையமைத்தது அனிருத் தான் என்று சிம்பு தரப்பிலிருந்து உறுதியான தகவல் வந்தது.
அனிருத் இன்று இந்த அளவிற்கு உயர அவருடைய உறவினராகவும் இருக்கும் தனுஷ் தான் மிக முக்கிய காரணம். அவர்தான் தொடர்ந்து தான் தயாரிக்கும் படங்களிலும், தான் நடிக்கும் படங்களிலும் அனிருத்தை இசையமைக்க வைக்கிறார். நாளை கூட தனுஷ் நடித்து அனிருத் இசையமைத்துள்ள தங்கமகன் படம் வெளியாக உள்ளது. இவ்வளவு சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அனிருத் செயல் குறித்து தனுஷ் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
அதோடு மட்டுமல்லாமல் அனிருத் டிவிட்டரில் தங்கமகன் படத்தைப் பற்றி டிவீட் செய்வதை தனுஷும் ரி-ட்வீட் செய்து கொண்டேயிருக்கிறார். அதற்கெல்லாம் தனுஷுக்கு நேரமிருக்கும் போது அனிருத்தின் செயலைக் கண்டிக்காமல் இருப்பது ஏன் கோலிவுட்டிலேயே கேள்வி கேட்கிறார்கள்.