ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
சண்டை இயக்குனர் சூப்பர் சுப்பராயனின் மகன் திலீப் சுப்பராயன் தயாரித்துள்ள படம் அஞ்சல. விமல், நந்திதா, பசுபதி நடித்துள்ளனர். மலையாள இசை அமைப்பாளர் கோபிசுந்தர் இசை அமைத்துள்ளார். தங்கம் சரவணன் இயக்கி உள்ளார்.
மதுரை அருகே உள்ள சோழவந்தானில் ஒரு டீக்கடையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம். சோழவந்தானுக்கு பஞ்சம் பிழைப்பதற்காக வரும் பசுபதி அந்த ஊரில் ஒரு டீக்கடையை நடத்துகிறார். ஊரின் நல்லது கெட்டதுகளுக்கு அந்த டீக்கடைதான் பிரதானமா இருக்கும். கிராமத்து இளைஞர்களின் சந்திப்பு இடமும் அதுதான்.
இப்படிப்பட்ட டீக்கடை சாலை விரிவாக்கத்துக்காக இடிக்க அரசும், உள்ளூர் அரசியல்வாதிகள் சிலரும் முடிவு செய்கிறார்கள். தங்களின் நெடுநாளைய நண்பனான டீக்கடையை காப்பாற்ற அந்த ஊர் இளைஞர்கள் விமல் தலைமையில் போராடுகிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது? டீக்கடை அகற்றப்பட்டதா என்கிற கதை. நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த இந்தப் படம் தற்போது வருகிற 24ந் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.