மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தன்னுடைய 38வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். உதயநிதி நடித்து வரும் 'ஜாலி எல்எல்பி' படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பில் அவர் கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இயக்குனர் அகமது, நாயகிகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர்கள் ராதாரவி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்து அவர் நாயகனாக நடித்து வெளிவர உள்ள 'கெத்து' படத்தின் டிரைலரை இன்று வெளியிடுகிறார்கள். இந்தப் படத்தில் எமி ஜாக்சன், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
உதயநிதிக்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். பல வித்தியாசமான படங்களை வாங்கி தன்னுடைய நிறுவனம் மூலம் வெளியிட்டும், படங்களைத் தயாரித்தும் வந்த உதயநிதி ஸ்டாலின் தான் தயாரித்த 'ஆதவன்' திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரே ஒரு காட்சியில் நடித்து நடிகராக அறிமுகமானார். அதன் பின் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படம் மூலம் 2012ம் ஆண்டு நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து 'இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா' ஆகிய படங்களில் நாயகனாக நடித்தார். அவர் நடித்துள்ள 'கெத்து' படம் டிசம்பர் 18ம் தேதி வெளியாக உள்ளது. ஹிந்தியில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஜாலி எல்எல்பி' படத்தின் தமிழ் ரீமேக்கில் தற்போது நாயகனாக நடித்து வருகிறார்.