மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மகேந்திரன் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவான கை கொடுக்கும் கை படத்தில் அறிமுகமானவர் சின்னி ஜெயந்த். அப்பாவி வில்லன் கேரக்டரில் அறிமுகமாகி அதன் பிறகு 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடியனாக நடித்தார். தனிப்பட்ட குரல் உச்சரிப்பு, மிமிக்ரி, மேனரிசம் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். நீயே என் காதலி என்ற படத்தை இயக்கினார்.
சினிமாவில் புதிய தலைமுறை காமெடியன்கள் வந்ததும் சின்னி ஜெயந்த் சின்னத்திரைக்கு சென்றார். சந்தானத்துடன் இணைந்து லொள்ளு சபா நிகழ்ச்சியை நடத்தினார். அதன் பிறகு கலக்கப்போவது யாரு, சகலை ரகளை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடத்தினார்.
இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபு சாலமன் தயாரிப்பில், சாட்டை அன்பழகன் இயக்கும் படத்தில் ஹீரோயின் ஆனந்தியின் அப்பாவாக நடிக்கிறார். கயல் சந்திரன் ஹீரோவாக நடிக்கிறார். இவர்கள் தவிர கிஷோர், ஹரீஸ் நடிக்கிறார்கள். இந்த 5 பேரை சுற்றி நடக்கிற கதை. இட்லி கடை நடத்தி மகளை படிக்க வைக்கிற ஏழை தந்தையாக நடிக்கிறார் சின்னி ஜெயந்த்.