மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரித்துள்ள படம் - 'பசங்க-2'. பசங்க படத்தைப் போலவே குழந்தைகளை மையப்படுத்தி பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் இது. இப்படத்தில் கவின், நயனா உட்பட பல குழந்தை நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். சூர்யா, அமலா பால் இருவரும் கணவன் மனைவியாக நடிக்கின்றனர். சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இவர்கள் தவிர, பிந்து மாதவி, கார்த்திக் குமார் இன்னொரு ஜோடியாக நடிக்கின்றனர். சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரித்து சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற '36 வயதினிலே' படத்தை தொடர்ந்து இந்நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக 'பசங்க-2' தயாராகி இருக்கிறது.
'பசங்க-2'வின் ஒளிப்பதிவை பாலசுப்ரமணியம் கவனித்திருக்க, 'பிசாசு' படப் புகழ் அரோல் கொரேலி இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க குழந்தைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள பசங்க - 2 படத்தை டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். பசங்க - 2 படம் ரிலீசாகிற அதே தேதியில்தான் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரஜினி முருகன்' திரைப்படமும் வெளியாக இருக்கிறது.