விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
நடிகர் தனுஷ் டிடிஎச் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார், தற்போது இந்த விளம்பரம் டிவிக்களில் ஒளிப்பரப்பாக வருகிறது. இந்த விளம்பரத்திற்கு கேபிள் ஆபரேட்டர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர், அதோடு தனுஷூக்கு கண்டனம் தெரிவித்து உள்ளதோடு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் சார்பாக விடுக்கப்பட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது...
தனுஷ் டாடா ஸ்கை எனும் DTH நிறுவன விளம்பரத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்களை கொச்சைப்படுத்தி கேவலமாக சித்தரிக்கும் நடவடிக்கை கடுமையாக கண்டிக்கிறோம். இந்த விளம்பர காட்சிகளை உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். இப்படி தினமும் தனது ரத்தத்தை வியர்வையாக்கி வளர்த்தெடுத்த கேபிள் டிவி தொழிலை பகாசூர கம்பனிகளின் கைகூலியாக மாறி தனுஷ் அவர்கள் சொற்ப பணத்திற்காக கேபிள் டிவி ஆபரேட்டர்களை திரைப்பட நடிகர் கொச்சைப்படுத்தி சித்தரிக்கும் நடவடிக்கை ஏற்கமுடியாது.
இந்த காட்சியை ரத்து செய்து தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். தவறும் பட்சத்தில் பல்லாயிரக்கணக்கான கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்த நேரிடும் என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.