மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிகளிலும் அசத்தி வரும் நடிகர் ஷாம் இப்போது இந்தியிலும் நடிக்க போகிறார்.
தமிழில் 12பி, ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, பாலா, அன்பே அன்பே, இயற்கை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் ஷாம். தமிழில் வாய்ப்பு குறைந்த பின்னர் கன்னடம், தெலுங்கு பக்கம் போனார். கன்னடத்தை காட்டிலும் தெலுங்கில் இவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. இப்போது தெலுங்கில் முன்னணி நடிகராகவும் ஜொலிக்க தொடங்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் தில்லாலங்கடி படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இப்படம் தெலுங்கில் வெளிவந்த கிக் படத்தின் ரீ-மேக்காகும். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதன் ஒரு கட்டமாக முகவரி படத்தை இயக்கிய டைரக்டர் துரை இயக்கத்தில் "6" என்ற படத்தில் மூன்று வித்யாசமான கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஷாமிற்கு பாலிவுட் வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. தில்லாலங்கடி படம் இந்தியில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இதில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கிறார். தில்லாலங்கடி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த ஷாமின் நடிப்பை பார்த்து அசந்து போன் சல்மான், இந்தியிலும் அதே வேடத்தில் அவரை நடிக்க சொல்லியிருக்கிறார்.
இதுகுறித்து ஷாம் கூறியதாவது, தெலுங்கில் வெளிவந்த கிக், தமிழில்(தில்லாலங்கடி) படம் இந்தியில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இதில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கிறார். கிக், தில்லாலங்கடி படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்து வெகுவாக பாராட்டினார். இந்தியிலும் என்னை அதே வேடத்தில் நடிக்க சொல்லியிருக்கிறார். சல்மானுடன் நடிக்க மிக ஆவலாக உள்ளது. செப்டம்பர் மாதம் இப்படத்தின் சூட்டிங் ஆரம்பமாகிறது. இந்தபடத்தின் மூலம் இந்தியிலும் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஏற்படும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.