விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
சதுரங்க வேட்டை படத்தில் நாயகனாக நடித்தவர் ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நட்ராஜ். அதற்கு முன்பே சக்கர வியூகம், மிளகா, முத்துக்கு முத்தாக போன்ற படங்களில் அவர் நடித்திருந்தபோதும் சதுரங்க வேட்டைதான் அவருக்கு பெரிய ஹிட்டாக அமைந்தது. அதன்பிறகு கதம் கதம் என்ற படத்தில் மட்டுமே நடித்த வர், விஜய்யின் புலி உள்ளிட்ட சில படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
இந்நிலையில், தற்போது போங்கு என்ற படத்தில் நாயகனாக நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் நட்ராஜ். சமீபத்தில் விக்ரம் நடித்து வெளியான பத்து எண்றதுக்குள்ள படம் போன்று ஒரு டிராவலில் நடக்கும் கதையில் இப்படம் தயாராகிறதாம். இப்படத்திற்கு லட்சுமிராய் நடித்தால்தான் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று அவர் கேட்ட தொகையை கொடுத்து புக் பண்ணியிருக்கிறார்கள். அதோடு பூஜா என்ற இன்னொரு நாயகியும் நடிக்கிறாராம்.
மேலும், இதுவரை நட்ராஜ் நடித்த படங்களை விட பிரமாண்ட படமாக உருவாகும் இந்த படத்தை 8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கிறார்களாம். த்ரில்லர், ஆக்சன், காமெடி என ஒரு கலவையான கதையில் உருவாக்கும் போங்கு படத்தின் படப்பிடிப்பை டிசம்பர் மாதம் தொடங்கி அடுத்த மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.