மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தெய்வத்திருமகன் படத்தில் விக்ரமின் நடிப்பை பார்த்து பிரமித்து போய்விட்டேன். இந்திய அளவில் அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதை இப்படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்து இருக்கிறார் என்று வெகுவாக பாராட்டுகிறார் அனுஷ்கா.
மதராசப்பட்டினம் படத்தின் மூலம் பிரபலமான டைரக்டர் விஜய், அடுத்து விக்ரமை வைத்து தெய்வத்திருமகன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்ரமுடன் அனுஷ்கா, அமலாபால், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். இப்படத்தில் விக்ரம் மன வளர்ச்சி குன்றிய இளைஞராக நடிக்கிறார். படத்தில் விக்ரமின் நடிப்பை பார்த்து பிரமித்து போய் இருக்கிறார் அனுஷ்கா.
இதுகுறித்து அனுஷ்கா கூறியதாவது, இந்தபடத்தில் விக்ரமின் நடிப்பை பார்த்து பிரமித்து போய்விட்டேன். ஒவ்வொரு காட்சிக்கும் அவர் படும் சிரமங்கள் நேரில் பார்த்து ஆச்சரியப்பட்டேன். தான் மட்டுமல்ல தன்னுடன் நடிப்பவர்களும் நன்றாக நடிக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டினார். என்னுடைய சினிமா வாழ்வில் இப்படி நடிக்கணும் என்று யாரும் இதுவரை சொல்லிக் கொடுத்ததில்லை. படத்தில் அவருடைய நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்து விட்டது. இந்தபடம் விக்ரமிற்கு நிச்சயம் பல விருதுகளை பெற்று தரும். இந்திய அளவில் அவர் தலைசிறந்த நடிகர். விக்ரம் மட்டுமல்ல இந்தபடத்தில் என்னை கவர்ந்த இன்னொரு விஷயம் ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையும் தான். இவ்வாறு அவர் கூறினார்.