மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கடந்த 18-ந்தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று, அதில் பாண்டவர் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றுக்கொண்டதோடு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனையிலும் இறங்கி விட்டனர். மேலும், தேர்தல் நாளன்று வாக்களிக்க வந்தபோது, தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் கொடுத்த வாக்குறுதியை உயிர் போனாலும் நிறைவேற்றி விட வேண்டும் என்று சொன்ன ரஜினி, தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ் நடிகர் சங்கமாக மாற்ற வேண்டும் என்று தனது கருத்தினை பதிவு செய்தார்.
ஆனால், அவருக்கு பிறகு வாக்களிக்க வந்த கமலிடம், ரஜினி சொன்ன கருத்தினை மீடியாக்கள் தெரிவித்தபோது, இந்திய நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் என்றார். கமலின் இந்த கருத்துக்கு எதிர்ப்புகள் ஏற்பட்டதோடு, ரஜினியின் கருத்துக்கு ஆதரவும் தெரிவிக்கப்பட்டு வந்தது. இதனால் இந்த விவகாரமே ரஜினி-கமலுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது போன்ற சூழலை ஏற்படுத்தியது.
அதனால், இதை சலசலப்பான சூழலை மாற்ற வேண்டும் என்று யோசித்த பாண்டவர் அணி, ரஜினி, கமலுக்கு நடிகர் சங்கத்தில் கெளரவ பதவிகளை வழங்க திட்டமிட்டனர். ஆனால் தற்போது கமல் தனக்கு கெளரவ பதவி வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று பேட்டி அளித்த, கமல்ஹாசனிடம் இதுபற்றி கேட்ட போது, தென்னிந்திய நடிகர் சங்கத்தில், எனக்கு எந்த கவுரவ பதவியும் வேண்டாம்; விஷால் அணிக்கு, என் ஆதரவு எப்போதும் உண்டு. நடிகர் சங்க கட்டடத்தை நிச்சயம் கட்ட வேண்டும், என்றார்.