மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பொல்லாதவன் படத்தில் வெற்றி மாறன் தொடங்கி வைத்தார் வடசென்னை சீசனை. தற்போது தயாராகிற பெரும்பாலான படங்கள் வடசென்னையை கதைகளமாக கொண்டிருக்கிறது. அந்த வகையில் அடுத்து வரும் ஒரு வடசென்னை கதைதான் பழைய வண்ணாரப்பேட்டை. பிரஜன், ரிச்சர்ட்டுடன் அஸ்மிதா என்ற புதுமுகம் ஹீரோயினாக நடிக்கிறார். கருணாஸ், ரோபோ சங்கர், முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். பாருக் ஒளிப்பதிவு செய்கிறார், ஜுபின் இசை அமைக்கிறார். ஜி.மோகன் இயக்கி உள்ளார்.
"அரசியல் கலந்த த்ரில்லர் கதை. பழைய வண்ணாரப்பேட்டையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாராகி உள்ளது. 50 சதகிவித படம் இரவு நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அப்பாவி வடசென்னை இளைஞர்களை அரசியல்வாதிகளும், தாதாக்களும் எப்படி பயன்படுத்துகிறார்கள். தேவையில்லாத போது எப்படி அழிக்கிறார்கள் என்கிற கதை. முதன் முறையாக கானா பாலாவும், வேல்முருகனும் இணைந்து பாடி நடித்திருக்கிறார்கள். ரிச்சர்ட் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். படத்தை விரைவிலேயே வெளியிடுகிறோம்" என்கிறார் இயக்குனர் மோகன்.