மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கமல்ஹாசனைக் குறி வைத்தே வேண்டுமென்றே இது நடக்கிறதா அல்லது யதேச்சையாக நடக்கும் நிகழ்வா என்று தெரியவில்லை. தூங்காவனம் படத்தின் முதுல் டிரைலரை கடந்த மாதம் 17ம் தேதி வெளியிட்டார் கமல்ஹாசன். டிரைலர் வெளியான சில மணி நேரங்களில் அதிகமாகப் பேசப்பட்டது. ஆனால், அன்றிரவு திடீரென ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு தூங்காவனம் பேச்சை அப்படியே அமுக்கி விட்டார்கள். மறு நாள் வரை கபாலி படத்தின் முதல் பார்வை பற்றிய பேச்சுத்தான் அதிகமாக இருந்தது. இருந்தாலும் கமல்ஹாசனின் தூங்காவனம் படத்தின் முதல் டிரைலர் 25 லட்சம் ஹிட்ஸ்களைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறது.
நேற்று தூங்காவனம் படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியிடப்பட்டது. அந்த டிரைலர் பற்றிய பேச்சு ஆரம்பமாவதற்குள் வேதாளம் படத்தின் டீசர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. கபாலி படத்தின் முதல் பார்வை எப்படி தூங்காவனம் முதல் டிரைலர் பற்றிய பேச்சை அமுக்கியதோ, அதே போல வேதாளம் படத்தின் டீசர் வெளிவந்து தூங்காவனம் படத்தின் இரண்டாவது டிரைலர் பற்றிய பேச்சையும் குறைத்துவிட்டது. இன்று 8ம் தேதி 12:01 மணியிலிருந்து வேதாளம் டீசர் பற்றியே சமூக வலைத்தளங்களில் பேச்சு பரவி வேதாளம் பற்றியவற்றை மட்டுமே டிரென்டிங்கில் வைத்துக் கொண்டிருக்கிறது.
கபாலியும், வேதாளமும் தூங்காவனத்தில் இப்படி விளையாடுவது சரியா ?