மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
அஜித், விஜய், சூர்யா போன்ற இளம் ஹீரோக்களே வருடத்துக்கு ஒரு படத்தில்தான் நடிக்கின்றனர். அதிகபட்சமாக இரண்டு படங்களில் நடித்தால் அது அபூர்வம். அவர்களைவிட வயதில் மூத்தவரான கமல் படு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அதுமட்டுமல்ல படத்துக்குப் படம் வெரைட்டியான சப்ஜெக்ட்டுகளிலும் நடித்து வருகிறார். கமல் நடிப்பில் இந்த வருடம் உத்தமவில்லன், பாபநாசம் என இரண்டு படங்கள் வெளியாகிவிட்டன. தீபாவளிக்கு கமலின் அடுத்த படமான 'தூங்கவனம்' ரிலீஸாகவிருக்கிறது.
'தூங்காவனம்' படம் தெலுங்கிலும் 'சீக்கட்டி ராஜ்ஜியம்' என்ற பெயரில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. இந்த இரண்டு படங்களுக்கான படப்பிடிப்பையும் மொத்தம் 52 நாட்களிலேயே முடித்துவிட்டார்கள். 'பேட்ச்ஒர்க்' என்று சொல்லப்படும் விடுபட்ட ஷாட்களை எடுப்பதற்காக மீண்டும் 8 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 60 நாட்களில் 2 மொழியில் படத்தை முடித்திருக்கிறார் கமல்ஹாசன்.
இத்தனைக்கும் 'தூங்காவனம்' படம் மும்பை எக்ஸ்பிரஸ் போல் காமெடிப் படமெல்ல. ஹாலிவுட் ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ள முழுநீள ஆக்ஷன் படம். உண்மையில் சாதனைதான்.