மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
"தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலிருந்து வந்து சென்னையில் வாடகை வீட்டில் வசிக்கும் மக்கள் அனுபவிக்கும் கொடுமை பயங்கரமானது. "நீங்க என்ன பேஸ்ட் யூஸ் பண்ணுவீங்க?" என்கிற வரைக்கும் கேள்வி கேட்டுத்தான் வீடு தருவார்கள். விருந்தாளிகள் வந்தால் "எத்தனை நாளைக்கு தங்குவார்கள். சீக்கிரம் ஊருக்கு அனுப்புங்க" என்று சொல்லி நம் குடும்ப விஷயத்துக்குள் மூக்கை நுழைப்பார்கள் சொந்த விடு இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக அவர்கள் உயர்ந்தவர்கள் போலவும் வாடகைக்கு குடியிருப்பவர்கள் இரண்டாந்தர குடிமக்கள் போலவும் நடத்தப்படுகிறார்கள். இப்படி ஒரு விஷயத்தை நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி சொல்கிற படம்தான் கடிகார மனிதர்கள்" என்கிறார் இயக்குனர் வைகறை பாலன்.
கிஷோர், ஷெரின், பிரதீப் ஜோஸ், பாலாசிங், லதாராவ் உள்பட பலர் நடிக்கிறார்கள். உமா சங்கர் ஒளிப்பதிவு செய்கிறார், சி.எஸ்.சாம் இசை அமைக்கிறார். கிரைஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் வீஷ் பிரதீப் ஜோஸ் தயாரிக்கிறார்கள். படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. விரைவில் வெளியாகிறது.