மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில், நடிகர் பிரபாஸ், நடிகை தமன்னா நடிப்பில் உருவான பாகுபலி திரைப்படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் போன்ற பல மொழிகளில் வெளிவந்து வசூல் சாதனை படைத்துள்ளது. கடந்த ஜூலை 10 ஆம் தேதி வெளிவந்த பாகுபலி படத்தின், இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது. பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வு செய்யப்பட்டவர் நடிகை ஸ்ரீதேவி தான். ஆனால் இப்படத்தில் நடிக்க ஸ்ரீதேவி கேட்ட சம்பளம் அதிகமாக இருந்ததால் ராஜமௌலி ரம்யா கிருஷ்ணனை சிவகாமியாக நடிக்க வைத்தார். பாகுபலி படத்தின் கதாபாத்திரங்களில் சிவகாமி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பாகுபலி படத்திற்கு கிடைத்த வரவேற்பையும் தான் தவறவிட்ட சிவகாமி கதாபாத்திரத்தின் வலிமையையும் கண்ட ஸ்ரீதேவி செய்த தவறை திருத்திக் கொள்ள பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ராஜமௌலியும் ஸ்ரீதேவி பாகுபலி 2 படத்தில் நடிப்பது குறித்து பரிசீலனை செய்து வருகின்றாராம். ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடித்துள்ள புலி படம் விரைவில் வெளிவரவுள்ளது.