விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
பல முன்னணி இயக்குனர்கள் தங்கள் முதல் படத்திலேயே ஓஹோவென பேசப்பட்டிருந்தாலும், பலருக்கும் அவர்கள் முதல் படமாக எடுக்க நினைத்திருந்தது நிச்சயமாக அந்தப்படமாக இருந்திருக்காது.. தவிர, இப்போது ஒவ்வொருவருக்கும், இவர் இந்தமாதிரி படங்களைத்தான் இயக்குவார் என ஒரு இமேஜ் உருவாகிவிட்டதால் பலருக்கு இன்னும் அவர்களது கனவுப்படமாகவே அது இருக்கும்.. வெற்றியோ, தோல்வியோ 'சைவம்' படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய் போல, ஒரு சிலர் மட்டுமே ரிஸ்க் எடுத்து தங்களது ரூட்டில் இருந்து விலகி தங்களது கனவுப்படத்தை திரையில் கொண்டுவர முயற்சிப்பார்கள்....
இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் அப்படிப்பட்ட ஒரு இயக்குனர் தான். மலையாளத்திலும் தமிழிலும் தொடர்ந்து த்ரிஷ்யம்', 'பாபநாசம்' படங்களின் மூலமாக ஒரு கமர்ஷியல் இயக்குனராக ரசிகர்களின் மனதில் பதிந்துள்ள ஜீத்து ஜோசப்புக்கு, தற்போது திலீப்பை வைத்து அவர் இயக்கியுள்ள 'லைப் ஆப் ஜோஸுட்டி' அவரது கனவுப்படம் தான். படத்தின் டேக்லைனே நோ ட்விஸ்ட்.. நோ சஸ்பென்ஸ் என்பதுதான்.. காரணம் தனது முந்தைய படத்தை மனதில் வைத்துக்கொண்டு இந்தப்படத்தை பார்க்க கூடாது என்கிற முன்னெச்சரிக்கையுடன் தான் இந்த டேக்லைனை வைத்துள்ளார் ஜீத்து ஜோசப்..
இந்தப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இதில் ஜோஸுட்டியாக வரும் திலீப் ஒரு சமையற்காரராக நடித்துள்ளார். சாதாரணமாக் சிறுவர்களுடன் சேர்ந்து குட்டையில் மீன்பிடிக்கிறார். சிறுவர்களின் கிரிக்கெட்டுக்கு அம்பயராக நிற்கிறார். கிராமத்து பெண்ணான ரட்சனா நாராயணன்குட்டியை காதலிக்கிறார்.. சந்தர்ப்பவசத்தால் வெளிநாட்டு பெண்ணான ஜோதி கிருஷ்ணாவை மணந்துகொள்கிறார் என ஜோஸுட்டி என்கிற சாதாரண மனிதனின் வாழ்க்கையை மட்டுமே சொல்லியிருக்கிறார் என்பது டீசரை பார்க்கும்போதே தெரிகிறது.. ஜீத்து ஜோசப்புக்கு அவரது கனவு (படம்) நல்ல பலனை தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.