மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாவில் பல வருடங்களாக கவர்ச்சி வேடங்களில் நடித்தும், ஆடியும் வருகிறவர் பாபிலோனா. இவருக்கும், ஆரணியைச் சேர்ந்த தொழிலதிபர் சுந்தர் பவுல்ராஜ் என்பவருக்கும் காதல் இருந்து வந்தது. இருவர் வீட்டிலும் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்கள்.
இருவரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி, சாலிகிராமத்தில் உள்ள பாபிலோனா வீட்டில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணம் வருகிற 9ந் தேதி வடபழனியின் உள்ள நட்சத்திர ஓட்டலில் கிறிஸ்தவ முறைப்படி நடக்கிறது. இதில் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகிறார்கள்.