விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
ப்ரூஸ் லீ என்ற பெயரைத் தெரியாதவர்கள யாரும் இருக்க மாட்டார்கள். ஹாங்காங் நடிகரான ப்ரூஸ் லீ, அவருடைய சண்டைப் படங்களுக்காகவே அதிகம் பேசப்பட்டவர். இளம் வயதிலேயே மரணமடைந்தவரின் இறப்பில் பல மர்மங்கள் இருப்பதாக இன்று வரை பேசப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட உலகப் புகழ் வாய்ந்த நடிகரின் பெயரில் தமிழ், தெலுங்கில் தனித் தனியாக இரண்டு படங்களுக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளன. இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜி.வி.பிரகாஷ் அடுத்து நடிக்க உள்ள ஒரு படத்தின் பெயர் 'ப்ரூஸ் லீ''. இப்படத்திற்கான முதல் பார்வை கடந்த ஜுலை மாதம் 27ம் தேதியே வெளியிடப்பட்டது. பாண்டிராஜின் உதவியாளரான பிரஷாந்த் இந்தப் படத்தை இயக்குகிறார். கடந்த சில நாட்களாகக் கூட இந்தப் படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார் என செய்திகள் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.