மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பிற்கு, விஷால் அணியினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த விஷால் அணியினர் தரப்பில், விஷால் கூறியதாவது, சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவது குறித்த ஜெயலலிதாவின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. 2002ம் ஆண்டில், சென்னை அடையாறில், இதற்கென இடம் ஒதுக்கப்பட்டது. 2015ம் ஆண்டில், இதற்கான பணியை, அரசு துவக்க உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
நடிகர் சங்கம், இதற்கான பணிகளை மேற்கொள்ளாததது, நடிகர்களுக்கே பெருத்த அவமானமாக உள்ளது. தமிழக அரசு மணிமண்டபம் கட்ட முன்வந்திருப்பது, ஒரு நடிகருக்கு செய்யும் மரியாதை என்று கருதாமல், நடிப்புக்கே செய்யும் மரியாதையாக நாங்கள் கருதுகிறோம்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், எங்கள் அணி வெற்றி பெற்றால், நடிகர் சங்கத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டுவோம் என்பதில் தங்களுக்கு எவ்வித மாற்றமுமில்லை என்று விஷால் கூறினார்.