மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கோலிவுட் நடிகர்களில் விஜய் படங்களைப் பொறுத்தவரை அவரது எல்லா படங்களுமே படத்தை தயாரித்தவர்களுக்கும், வாங்கிய விநியோகஸ்தர் களுக்கும் லாபத்தைதான் கொடுத்து வருகின்றன. அந்த அளவுக்கு பக்கா கமர்சியல் கதைகளாக நடிக்கிறார் விஜய். அதோடு அவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருப்பதால் அவரது படங்களுக்கு நல்லதொரு ஓப்பனிங் இருக்கிறது. இதனால் வெளியாகி ஒரு வாரத்திலேயே லாபம் சம்பாதித்து விடுகிறார்கள். இந்த நிலையில், பாண்டியநாடு படத்தை அடுத்து சுசீந்திரனின் பாயும்புலி படத்தில் நடித்திருக்கும் விஷால், விஜய்யின் புலிக்கு போட்டியாக அவர்கள் ஆடியோ ரிலீஸ் செய்த அதே நாளில் தானும் ஆடியோவை வெளியிட்டார். அதேபோல் புலி வெளியாகும் அதேநாளில்தான் எனது படமும் வெளியாகும் என்று ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்தார். ஆனால், இப்போது புலிக்கு ஏற்பட்டிருக்கிற வரவேற்பினை பார்த்து, செப்டம்பர் 17-ந்தேதி புலி வருகிறது என்றால், விஷால் இரண்டு வாரம் முந்தி விட்டார். அதாவது பாயும் புலி செப்டம்பர் 4-ந்தேதியே தியேட்டருக்கு வருகிறது. இந்த நிலையில், ஆர்யா நடிப்பில் ரிலீசுக்கு தயாராகியுள்ள யட்சன் படமும் செப்டம்பரில் வெளியாகிறது. ஆனால், விஜய், விஷால் படங்கள் வெளியாகும் அதேநாளில் படத்தை இறக்கி விட்டால், மொதலுக்கே மோசமாகி விடும் என்று செப்டம்பர் 11-ந்தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். ஆக, செப்டம்பரில் முதல் வாரம் விஷால், 2வது வாரம் ஆர்யா, 3வது வாரம் விஜய் என வரிசை கட்டுகிறார்கள்.