மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
'வாலு' திரைப்படத்தின் வெளியீடு ஒருவழியாக இன்று வௌியாகி உள்ளது. இந்தப் படம் வெளிவருவதற்குள் ஏற்படுத்தப்பட்ட பரபரப்புகள் படத்தின் விளம்பரத்திற்காகவோ என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர். சுமார் 3 வருடங்கள் கழித்து சிம்பு நடிக்கும் ஒரு படம், அதுவும் 3 வருடத்திற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஒரு பழைய படம் வருவதை எப்படி பரபரப்பில்லாமல் வெளியிடுவது.
மூன்று மாதங்களில் எடுத்து முடிக்கப்பட்ட ஒரு படத்தை மூன்று நாட்கள் ஓட வைப்பதே இப்போது மிகவும் சிரமமான விஷயமாக இருக்கும் போது, மூன்று வருடங்களாக எடுத்த படத்தை எப்படி ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பது. அதற்கேற்றபடி தயாரிப்பாளரின் நிதிச் சுமை ஒரு பக்கம், சிம்பு படத்தை முடித்துக் கொடுக்க ஏற்படுத்திய கால நீட்டிப்பு இப்படி எல்லாமும் சேர்ந்து 'வாலு' படத்தை இன்றாவது கொண்டு வந்து சேர்த்ததே என்று சிலர் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.
வேறொரு தயாரிப்பாளர் படத்தில் சிம்பு நடித்த படத்தை வெளியிட இவ்வளவு தாமதம் ஏற்பட்ட நிலையில் டி.ஆர் குடும்பத்தின் சொந்தத் தயாரிப்பான 'இது நம்ம ஆளு' அடுத்து எப்போது வரும் என்று சிலர் கவலைப்பட ஆரம்பித்துள்ளனர். மற்றொரு தயாரிப்பாளர் படத்திற்குத்தான் சிக்கல்கள் அதிகம். ஆனால், தங்களது சொந்தப் படத்தையே இன்னும் முடித்து வெளியிடாமல் டிஆரும், சிம்புவும் இழுத்துக் கொண்டிருக்கிறார்களே, அந்தப் படத்தின் வெளியீட்டுத் தாமதத்திற்கு யார் மீது குற்றம் சொல்லப் போகிறார்கள் என கோலிவுட்டிலேயே சிலர் கேட்கிறார்கள். 'இது நம்ம ஆளு' படம் 2013ம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டது. இன்னமும் சில பாடல் காட்சிகள் எடுக்கப்பட வேண்டியுள்ளதாம். அடுத்து இந்தப் படத்திற்காக சிம்பு ரசிகர்கள் எவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டுமோ ?. 'வாலு', 'ஆளு' ரைமிங்காக ஒரு பொருத்தம் இருக்கிறது.