எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா |
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா துபாயில் கோலாகலமாக நடந்தது. நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக நடந்த இவ்விழாவில், வேலையில்லா பட்டதாரி படத்திற்காக தனுஷ்க்கு சிறந்த நடிகருக்கான விருதும், அரண்மனை படத்திற்காக ஹன்சிகாவிற்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது.
இது தவிர சிறப்பு விருதாக மெட்ராஸ் படத்திற்காக கார்த்திக்கும், வேலையில்லா பட்டதாரி படத்திற்காக அமலாபாலுக்கும், தென்னிந்திய சினிமாவின் சிறப்பு நடிகைக்கான விருது எமி ஜாக்சனுக்கும், வாழ்நாள் சாதனையாளர் விருது பாரதிராஜாவுக்கும் விழங்கப்பட்டது.
விழாவில் விருது பெற்றவர்களின் விபரம் வருமாறு...
சிறந்த நடிகர் - தனுஷ் (வேலையில்லா பட்டதாரி)
சிறந்த நடிகை - ஹன்சிகா மோத்வானி (அரண்மனை)
சிறந்த இயக்குநர் - ரஞ்சித் (மெட்ராஸ்)
சிறந்த படம் - கத்தி
சிறந்த குணச்சித்திர நடிகர் - பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)
சிறந்த குணச்சித்திர நடிகை - சரண்யா பொன்வண்ணன் (வேலையில்லா பட்டதாரி)
சிறந்த அறிமுக ஹீரோ - சந்திரன் (கயல்)
சிறந்த அறிமுக ஹீரோயின் - கத்ரீன் தெரஸா (மெட்ராஸ்)
சிறந்த அறிமுக இயக்குநர் - வேலராஜ் (வேலையில்லா பட்டதாரி)
சிறந்த வில்லன் நடிகர் - நீல் நிதின் முகேஷ் (கத்தி)
சிறந்த இசையமைப்பாளர் - அனிரூத் (கத்தி)
சிறந்த பாடலாசிரியர் - தனுஷ் (அம்மா அம்மா... பாடல் - வேலையில்லா பட்டதாரி)
சிறப்பு விருதுகள் விபரம் வருமாறு...
வாழ்நாள் சாதனையாளர் விருது - இயக்குநர் பாரதிராஜா
சிறந்த நடிகர் (சிறப்பு விருது) - கார்த்தி (மெட்ராஸ்)
சிறந்த நடிகை (சிறப்பு விருது) - அமலாபால் (வேலையில்லா பட்டதாரி)
தென்னிந்திய சினிமாவின் சிறப்பு விருது - தனுஷ்
தென்னிந்திய சினிமாவின் ஸ்டைலிஷ் நடிகை - எமி ஜாக்சன்
சிறந்த பாடல் (சிறப்பு விருது) - அனிரூத் (வேலையில்லா பட்டதாரி)