விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
'பாகுபலி' படத்தையடுத்து மற்றுமொரு தென்னிந்தியத் திரைப்படமான 'புலி' திரைப்படம் செப்டம்பர் 17ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தமிழில் நேரடியாக எடுத்துள்ளார்கள். அதே சமயம் தெலுங்கு, ஹிந்தி உட்பட சில மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். படத்தில் ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் இருப்பதால் தெலுங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற வாய்ப்பு உள்ளது. விஜய் நடித்த 'ஜில்லா' படம் சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் 'புலி' படத்திற்கான வரவேற்பு இன்னும் கூடுதலாகியுள்ளது. 'நான் ஈ' சுதீப் நடித்துள்ளதால் கர்நாடக மாநிலத்திலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். கேரளாவில் ஏற்கெனவே விஜய் படங்களுக்கென தனி வரவேற்பு உண்டு.
அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உட்பட பல வெளிநாடுகளிலும் படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு வருகிறார்களாம். தமிழ்நாட்டில் சுமார் 1000 திரையரங்குகளிலும், ஹிந்தியில் சுமார் 1000 திரையரங்குகளிலும், தெலுங்கில் சுமார் 1000 திரையரங்குகளிலும், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சுமார் 500 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் எனத் தெரிகிறது. இந்த எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
படத்தை மிகப் பெரும் அளவில் விளம்பரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்களாம். இந்தப் படம் மூலம் விஜய்க்கு சர்வதேச அளவில் ஒரு அடையாளத்தையும், தமிழில் அடுத்த வசூல் சூப்பர் ஸ்டார் விஜய்தான் எனவும் முன்னெடுத்துச் செல்ல உள்ளார்களாம்.