மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
டோலிவுட்டில் பாடகராகவும் இசையமைப்பாளராகவும் வெற்றி கண்ட பாப் இசை கலைஞர் பாபா சேகள் நடிகராகவும் தற்போது பிசியாகியுள்ளார். இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் டோலிவுட்டில் உருவாகியிருக்கும் ருத்ரமாதேவி திரைப்படத்தில் எதிர்மறை வேடத்தில் பாபா சேகள் நடித்துள்ளார். இந்நிலையில் பவர் ஸ்டார் பவன் கல்யாணின் பிறந்த நாளான செப்டம்பர் 2 ஆம் தேதி அவருக்கு பிறந்த நாள் பரிசு தரும் விதமாக பாபா சேகள் பாடல் ஒன்றை வெளியிடவுள்ளாராம். கடந்த 2012 ஆம் ஆண்டிலும் பாபா சேகள் பவன் கல்யாண் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்து பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. பவன் கல்யாணுக்கு ஜல்சா,கபார் சிங் போன்ற படங்களில் அறிமுக பாடல் பாடி புகழ் பெற்ற பாபா சேகள் மீண்டும் அவருக்காக பாடல் வெளியிடுவது பவர் ஸ்டார் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.