ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? |
மலையாள நடிகர் திலீப் நடிக்கும் படங்களை தொடர்ந்து கவனித்துவருபவர்களுக்கு ஒரு விஷயம் நன்றாகவே புலப்பட்டிருக்கும். அதாவது மலையாள மும்மூர்த்திகளான மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி ஆகியோரைப்போல இன்னும் சொல்லிக்கொள்ளும்படியான அவுட் அன்ட் அவுட் ஆக்சன் படத்தில் திலீப் நடிக்கவே இல்லை. பெரும்பாலும் அவரது கதாபாத்திரங்கள் காமெடிக்கும் சரிவிகித முக்கியத்துவம் கொடுப்பதால், என்னதான் எதிahகளுடன், வில்லனுடம் மோதும் காட்சிகளில் நடித்தாலும் அவரது ஆக்சன் அவ்வளவாக எடுபடாமல் போய்விடுகிறது.
இப்போது அந்தக்குறையை தீர்க்கும் விதமாக ஹாலிவுட் பாணியில் மலையாளத்தில் உருவாகும் ஆக்சன் படத்தில் நடிக்க இருக்கிறார் திலீப். 'தி லெஜன்ட்' என பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தை இயக்குபவர் பிரபல இயக்குனர் ஜோமோன்.. இங்கே ரஜினிக்கு 'பாட்ஷா' மாதிரி, மலையாளத்தில் மம்முட்டியின் எவர்கிரீன் மாஸ்டர் பீஸான 'சாம்ராஜ்யம்' படத்தை இயக்கியவர் என்கிற ஒற்றை வாக்கியம் போதும்.. அதிலேயே ஜோமோனின் பிரதாபத்தை நாம் அறிந்துகொள்ளலாம். தவிர இதுவரை மலையாள மும்மூர்த்திகளை மட்டும் வைத்தே, ஜோமோன் தனது படங்களை இயக்கியுள்ளார் என்பதால் இந்த முறை திலீப்பின் புதிய அவதாரத்தை நிச்சயம் பார்க்கலாம்.