மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய படங்களை இயக்கியவர் ராஜேஷ்.எம். தற்போது ஆர்யா-சந்தானம் கூட்டணியை வைத்து வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அதுவும், ஏற்கனவே இதே ஆர்யா-சந்தானம் கூட்டணியை வைத்து இயக்கிய பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தைப்போலவே கதை உருவாக்கியிருப்பதாக சொல்லும் அவர், அந்த படத்தில் நயன்தாரா நடித்தது போன்று இந்த படத்தில் தமன்னா நடித்திருப்பதாகவும் சொல்கிறார். அதே சாயல் கொண்ட கதை, அதே ஆர்யா, சந்தானம் என்றபோதும் காமெடியில் நிறைய புதுமைகளை செய்திருக்கிறேன். காமெடி படம் என்பதால் சரக்கு சீன்களும் உள்ளது. இதை யாரையும் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வைப்பதல்ல. காமெடி வரவைப்பதற்காக செய்வது. அந்த வகையில் காமெடி நல்லாவே ஒர்க்அவுட்டாகியிருக்கு.
மேலும், என்னோட எல்லா படத்திலேயுமே சந்தானம் இருப்பது பற்றி எல்லாரும் கேட்கிறாங்க. அதுக்கு காரணம், நான் காமெடி கதையை மட்டுமே யோசிக்கிறேன். ஒரு கதை பண்ணும்போதே அவர் மைண்டுல வந்து உட்கார்ந்திடுறாரு. அதனால் அவர்கூட இன்னொரு ஹீரோவையும் வச்சுத்தான் கதையையே யோசிக்கிறேன். அதனாலதான் சந்தானம் இல்லாமல் என படமே இல்லை என்றாகி விட்டது.