ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
டோலிவுட்டில் மூன்று தலைமுறைகளைக் கண்ட அக்கினேனி குடும்பத்தில் அக்கினேனி நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலாவின் மகனான அக்கினேனி அகில் ஒரு தெலுங்கு படத்தின் வாயிலாக நாயகனாக அறிமுகமாகவுள்ளார். நிதின் தயாரிப்பில் இயக்குனர் விவி விநாயக் இயக்கி வரும் இப்படத்தை அக்டோபர் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடிகை சேஷா சைகள் நடித்து வருகின்றார். நிசாம் பகுதியில் இப்படத்திற்கு நல்ல வியாபாரம் நடைபெற்றுள்ள நிலையில், ஆந்திராவில் இப்படத்தை ரூ.18 கோடி கொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்கியுள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மும்முரமாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் நிறைவு பெறும் என படக்குழுவினர் கூறுகின்றனர். அதன் பின்னர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை படக்குழுவினர் துவங்கவுள்ளனர். இப்படத்தை அக்டோபர் 22 ஆம் தேதி விஜயதசமி அன்று திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக படப்பிடிப்புத் தள தகவல்கள் தெரிவிக்கின்றன.