ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
பிரபுசாலமன் இயக்கிய கும்கி படத்தில் அறிமுகமானவர் விக்ரம் பிரபு. இந்த படத்தின் கதையை முதலில் அவர் சொன்னபோது, யானை பாகன் என்றதும் சற்று தயங்கினாராம் விக்ரம்பிரபு. ஆனால், யானையின் இன்னொரு பெயர் கணேசன் என்பதால், தனது தாத்தாவின் நிஜ பெயரும் கணேசன். முதல் படத்திலும் யானையுடன் நடிக்கிறோம். ஆக, தனது தாத்தாவே தனது அருகில் நிற்பது போல் இருக்கும் என்று யோசித்தபோது அந்த படத்தில் தைரியமாக நடிக்கத் தொடங்கினாராம். அதேபோன்று இப்போது இது என்ன மாயம் படத்தில் நடித்திருப்பவர் அடுத்தபடியாக தகராறு இயக்குனர் விநாயக் இயக்கும் வீர சிவாஜி என்ற படத்தில் நடிக்கிறார். தனது தாத்தாவின் சினிமா பெயர் சிவாஜி என்பதே இந்த படத்தின் டைட்டிலாகியிருப்பதால் முதல் படத்தைக்காட்டிலும் இன்னும் அவருக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளதாம். மேலும், கும்கி படம் வெற்றி பெற்றது போன்று, இந்த வீரசிவாஜி படமும் தனக்கு இன்னொரு வெற்றிப்படமாக அமையும் என்றும் நம்புகிறாராம் விக்ரம் பிரபு. இது முந்தைய படங்களை விட ஆக்சன் காட்சிகளும் நிறைந்த படம் என்பதால், தனது வீரத்தை காட்டுவதற்காக உடம்பை கட்டுமஸ்தாக மாற்றிக்கொண்டிருக்கிறாராம் விக்ரம்பிரபு.