மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
விஷால், காஜல் அவர்வால் நடித்துள்ள பாயும்புலி படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டது. 80 நாள் படப்பிடிப்புக்கு திட்டமிடப்பட்டு 74 நாளிலேயே முடிந்து விட்டது. விஷால் அடுத்த படத்தின் பணிகளிலும், நடிகர் சங்க பிரச்சினைகளிலும் பிசியாகி விட... இயக்குனர் சுசீந்திரன் படத்தின் பின்னணி இசை கோர்ப்பு, டப்பிங் பணிகளில் பிசியாகிவிட்டார்.
படத்தை பற்றி அவர் கூறியதாவது: எனக்கு இது 8வது படம், விஷாலுடன் இணையும் 2வது படம். ரஜினி டைட்டிலில் 3வது படம். எல்லா வகையிலும் இந்தப் படம் எனக்கு ஸ்பெஷல். மதுரை பின்னணியில் நடக்கும் போலீஸ் கதை. எனது பாணியிலான பேமிலி செண்டிமெண்டும் இருக்கும், சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் ஆக்ஷனும் இருக்கும். விஷால் என் கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக வருகிறார். "ஒருத்தன் யாரை கொலை செய்து விட்டு வேண்டுமானாலும் தப்பித்து விடலாம். ஒரு போலீசை கொலை செய்து விட்டு தப்பவே முடியாது" என்பதுதான் படத்தோட ஒன் லைன் ஸ்டோரி.
சூரியின் காமெடி நன்றாக வந்திருக்கிறது. இனி அவர் பரோட்டா சூரி என்று அழைக்கப்பட மாட்டார். இந்தப் படத்துக்கு பிறகு வேறு மாதிரி அழைக்கப்படுவார். அந்த அளவிற்கு யதார்த்தமான காமெடி செய்திருக்கிறார். காஜல் அகர்வாலும், விஷாலும் காண்ட்ராஸ்டான ஜோடி, நிறம், உயரம் எல்லாமே நேரெதிர். ஆனால் லவ் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகியிருக்கு. படத்துல விஷால் அவரை செல்லமாக முயல்குட்டின்னு கூப்பிடுவார். அப்படி ஒரு பாட்டும் இருக்கு. படத்துக்கு பிறகு எல்லோரும் காஜலை முயல்குட்டின்னு கூப்பிடுவாங்க என்கிறார் சுசீந்திரன்.