மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ்த் திரையுலகில் இன்றைய வசூல் நட்சத்திரங்களில் முதலிடத்தில் இருப்பவர் விஜய். இவர் நடிக்கும் படம் என்றாலே வினியோகஸ்தர்கள் போட்டி போட்டு வாங்குகிறார்கள். இந்த சென்டர், அந்த சென்டர் என்று இல்லாமல் ஏ, பி, சி ஆகிய மூன்று சென்டர்களிலும் விஜய் படம் நன்றாக வசூல் செய்யும் என்பதே அதற்குக் காரணம். சமீபத்தில் வெளிவந்த 'கத்தி' படம் வரை அது நிரூபிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் வரை விஜய்க்கு ரசிகர்களாக இருப்பதால் அவர்கள் கொடுக்கும் தொல்லையால் குடும்பத்தினரும் தியேட்டர்களுக்கு வருகிறார்கள் என்பதே உண்மை. தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளாவிலும் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை மலையாள நடிகர்களுக்கு இணையாக விஜய் உருவாக்கி வைத்திருக்கிறார்.
இப்போது புதிதாக தெலுங்கு தேசத்திலும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிவிட்டார். அதற்குக் காரணமாக 'ஜில்லா' படம் அமைந்துவிட்டது. தமிழில் இந்தப் படம் வெளிவந்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டாலும், கடந்த வாரம் தெலுங்கில் வெளியாக கமர்ஷியல் ஹிட் என்ற பெயரைப் பெற்றுவிட்டது. இதற்கு முன் விஜய் நடித்து தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட 'நண்பன், துப்பாக்கி' போன்ற படங்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டதால் வினியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தின. ஆனால், 'ஜில்லா' படம் நியாயமான விலைக்கு விற்கப்பட்டதால் நேற்றுடனே தியேட்டர் உரிமையாக விற்கப்பட்ட மொத்த விலையையும் வசூல் செய்துவிட்டதாம். இதுவரை சுமார் 4 கோடி ரூபாய் வசூலாகியுள்ள இந்தப் படத்தின் மூலம் வினியோகஸ்தர்களின் பங்காக மட்டும் 2.25 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'ஜில்லா' படத்தின் இந்த வெற்றி 'புலி' படத்தின் தெலுங்கு வியாபாரத்திற்கு பேருதவியாக இருக்கும் என்கிறார்கள்.