'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
டோலிவுட்டில் நகைச்சுவை நாயகானக வெற்றி கண்டுள்ள அல்லரி நரேஷ் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் வெற்றி அல்லரி நரேஷிற்கு புதிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.. இதனால் ஆந்திரா முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நரேஷ், ரசிகர்களைச் சந்தித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றார். ஏ.கே.என்டர்டையின்மென்ட் பட நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சாய் கிஷோர் இயக்கிய ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வசூலிலும் லாபம் கண்டுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து அல்லரி நரேஷ் தனது 50வது திரைப்படமான "மாமா மன்ச்சு அல்லுடு கன்ச்சு" என்ற படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் மோகன் பாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தை இயக்குநர் ஸ்ரீனிவாச ரெட்டி இயக்குகின்றார். இப்படம் குறித்து நடிகர் அல்லரி நரேஷ் கூறுகையில் தனது 50வது படம் என்ற பெயரில் அப்படத்தை விளம்பரப்படுத்த விரும்பவில்லை என்றும் நல்ல படங்களைக் கொடுப்பது மட்டுமே தனது குறிக்கோள் என்றும் கூறியுள்ளார்.அல்லரி நரேஷ் தமிழில் குறும்பு,போராளி,போன்ற படங்களில் நடித்துள்ளார்.