மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
''கும்கி'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். தொடர்ந்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு, கொம்பன் போன்ற ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார். பள்ளி மாணவியாக இருந்த லட்சுமி மேனன், இப்போது கல்லூரி மாணவியாக உயர்ந்துள்ளார். தற்போது அஜித்தின் 56வது படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்து வருகிறார்.
சமீபகாலமாக பழைய படங்களின் ரீ-மேக் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நடிகை லட்சுமி மேனனிடம் ஒரு பேட்டியின் போது நீங்கள் ரீ-மேக் படத்தில் நடிப்பதாக இருந்தால் எந்த படத்தில் நடிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு லட்சுமி மேனன், கரகாட்டக்காரன் படத்தை ரீ-மேக் செய்யப்போவதாக கேள்விப்பட்டேன். அப்படி யாராது ரீ-மேக் செய்தால் அதில் கனகா கேரக்டரில் தனக்கு நடிக்க ஆசை என்று கூறியுள்ளார்.