தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
ஏ.எம்.ரத்னம் இயக்கத்தில் 'வீரம்' சிவா இயக்கத்தில் அஜித் ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய ('தல 56') படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவுற்றதும், இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்கு இத்தாலிக்கு பறந்தது படக்குழு. அங்கே பாடல்காட்சிகள் மற்றும் சில காட்சிகள் படமாக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது படப்பிடிப்பிற்காக கொல்காத்தா சென்றுள்ளது சிவா தலைமையிலான 'தல 56' படக்குழு.
சில நாட்களுக்கு முன்பு கோல்கட்டா சென்ற படக்குழுவினர் அங்கே அஜித், ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகின்றனர். இப்படத்தில் ஸ்ருதிஹாசன் டாக்ஸி டிரைவராக நடிக்கிறார் என ஏற்கெனவே செய்திகள் வந்து கொண்டிருந்தன. அதை பொய்யாக்கும் வகையில், தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படத்தில், வக்கீல் கெட்டப்பில் இருக்கிறார் ஸ்ருதிஹாசன். நேற்று அதாவதுஜூலை 22 அன்று காலை கொல்கத்தாவிலுள்ள விக்டோரியா மெமோரியல் ஹால் முன்பு தல 56 படத்திற்கான படப்பிடிப்பு நடந்தது. அப்போது வக்கீல் உடையுடன் ஸ்ருதிஹாசன் ஓடிவருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தப் புகைப்படத்தை வைத்து இப்படத்தில் ஸ்ருதிஹாசன் வக்கீலாக நடிக்கிறாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்துதான் பல்வேறு ஊடகங்களில் ஸ்ருதிஹாசன் வக்கீலாக நடிக்கிறார் என செய்திகளும் வெளியாகி வருகின்றன. அஜித் தற்போது நடித்து வரும் படம் பாட்ஷா படத்தின் ரீமேக் என்று அரசல்புரசலாக செய்திகள் அடிபட்டு வருகின்றன. அது உண்மையாக இருக்கும்பட்சம்.. அந்தப் படத்தில் நீ நடந்தால் நடை அழகு என்ற பாடல்காட்சியில் நக்மாவின் கற்பனையில் ரஜினி பல்வேறு வேலை செய்பவராக பல கெட்டப்பில் வருவார். அந்தப்பாடல் தற்போது அஜித் கற்பனையில் வருவதாக மாற்றப்பட்டிருந்தால் ஸ்ருதிஹாசன் பல கெட்டப்பில் வர வாய்ப்புள்ளது.