மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் பிரபலப்படுத்திய ஓஹோ புரொடக்ஷன்ஸ் சாயலில், ஆஹா ஓஹோ புரொடக்ஷன்ஸ் என்ற படநிறுவனத்தைத் தொடங்கி அதன் முதல் தயாரிப்பாக தயாராகும் படம் ஆரண்யம். புதுமுகம் ராம், நீரஜா ஷாஜி, இளவரசு, சிங்கமுத்து,ஸ்ரீஹேமா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தை குபேர்ஜி என்பவர் இயக்கியுள்ளார். இவர் யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமலே இப்படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறார்.
ஆரண்யம் படத்தில் மீனாட்சி சுந்தரம் என்ற புதிய பாடலாசிரியர் அறிமுகமாகிறார். படத்தில் நான்கு பாடல்களை எழுதி இருக்கிறார். இவர் பா.விஜய்யிடம் உதவியாளராக இருந்தவராம். எனவே ஆரண்யம் இசைவெளியீட்டுவிழாவில் கலந்து கொண்ட பா.விஜய், " இப்போதெல்லாம் பாடலாசிரியர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை. இந்நிலையில் என்னிடம் உதவியாளராக இருந்த மீனாட்சி சுந்தரம் இதில் பாடலாசிரியராக அறிமுகமாகி 4 பாடல்களை எழுதி இருக்கிறார். அவருக்கு வாய்ப்பளித்ததற்கு படக்குழுவுக்கு நன்றி. இப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள். என்று வாழ்த்தினார்.