மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இன்றைய சமூக வலைத்தள உலகில் ஒரு திரைப்படக் கலைஞரின் ரசிகர்கள் எந்த அளவிற்கு இருக்கிறார்கள் என்பதை அவர்களது சமூக வலைத்தளங்களை வைத்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தக் காலத்தில் எல்லாம் ஒரு நடிகருக்கு எத்தனை ஆயிரம் ரசிகர் மன்றங்கள் இருக்கிறது என்பதுதான் அவர்களது பெருமையச் சொல்லும் விதமாக இருக்கும். இன்று ரசிகர் மன்றங்கள் இருந்தாலும் அவர்கள் படம் வரும் போது பேனர் வைப்பதுடன் நின்று விடுவார்கள். ஆனால், இன்று ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் படித்தவர்கள் கூட தங்கள் அபிமான கலைஞர்களுக்காக போஸ்டர்களை ஒட்டி வருகிறார்கள்.
'பாகுபலி' படம் வந்த பின் இயக்குனர் ராஜமௌலிக்கு ரசிகர்கள் அதிகமாக சேர்ந்து வருகின்றனர். இது அவரை சமூக வலைத்தளங்களில் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாவதை வைத்தே புரிந்து கொள்ள முடிகிறது.
இயக்குனர் ஷங்கருக்கு ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் நேற்று இரவு வரை அவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 16,11,407. ஷங்கரின் ஃபேஸ்புக் வலைத்தளத்தைப் பற்றி பேசிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை 55,136. சமீபத்தில் ஷங்கரை தொடர்ந்தவர்களின் எண்ணிக்கை 10,164. கடந்த சில வாரங்களில் ஷங்கரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 25.8 சதவீதம் குறைந்துவிட்டது. இயக்குனர் ராஜமௌலி நேற்று இரவு வரை ஃபேஸ்புக்கில் தொடர்பவர்களின் எண்ணிக்கை 31,42,807. அவருடைய வலைத்தளத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை 4,50,816. சமீபத்தில் ராஜமௌலியைத் தொடர்ந்தவர்களின் எண்ணிக்கை 78,919. கடந்த சில வாரங்களில் ராஜமௌலியைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 27 சதவீதம் கூடியுள்ளது.
டிவிட்டர் வலைத்தளத்தில் இயக்குனர் ஷங்கரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 4,43,389. ராஜமௌலியைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 14,11,567.
ஃபேஸ்புக் வலைத்தளத்தில் ஷங்கரை விட இரண்டு மடங்கு அதிகமாகவும், டிவிட்டர் வலைத்தளத்தில் ஷங்கரை விட மூன்று மடங்கு அதிகமாகவும் இருக்கிறார் ராஜமௌலி. இப்போது சொல்லுங்கள், யாருக்கு ரசிகர்கள் அதிகம் என்று ?.