விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
கன்னட சூப்பர் ஸ்டரான சிவராஜ்குமார் நடித்த வஜ்ரகயா கன்னடப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துக் கொடுத்தார் சிவகார்த்திகேயன். அதற்கு பணம் வாங்கிக் கொள்ளாமல் இலவசமாக நடித்துக் கொடுத்தார் என்று சொல்லப்பட்டது. அதனாலோ என்னவோ சிவகார்த்திகேயன் மீது சிவராஜ்குமாருக்கு மதிப்பும் மரியாதையும் எற்பட்டது.
தன் மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க சில தினங்களுக்கு முன் சென்னை வந்தார் சிவராஜ்குமார். கமல், ரஜினி உட்பட முன்னணி நட்சத்திரங்களை சந்தித்து தன் மகள் திருமணத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். ரஜினியை சந்தித்துவிட்டு அப்படியே தனுஷ் வீட்டுக்கும் சென்று அவரையும் ஐஸ்வர்யாவையும் அழைத்தார்.
அதோடு சிவகார்த்திகேயனை மறக்காமல் தொடர்பு கொண்ட சிவராஜ்குமார், அவரை சந்திக்க வேண்டும் என்று சொல்ல ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தன்னுடைய புதிய அலுவலகத்துக்கு வரச்சொல்லி இருக்கிறார். அதன்படி அங்கு சென்ற சிவராஜ்குமார் சிவகார்த்திகேயனுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு சென்றாராம்.
சிவகார்த்திகேயனின் புதிய அலுவலகத்தைக் கண்டு ஆச்சர்யப்பட்ட சிவராஜ்குமார் சிவகார்த்திகேயனை பாராட்டிச் சென்றிருக்கிறார்.